இந்தியா

செம்மரக் கடத்தல் கும்பல் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே செம்மர கடத்தல் கும்பலுக்கும், ஆந்திர போலீ ஸாருக்கும் சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் தமிழகத் தைச் சேர்ந்த ஒருவர் பலி யானார்.

செம்மர கடத்தலைத் தடுக்க ஆந்திர அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி, கடப்பா மாவட்டம் ரயில்வே கோடுரு மண்டலம், குக்கல தொட்டி வனப்பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, செம்மர கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனை சமாளிக்க, போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், தமிழ கத்தைச் சேர்ந்த ஒருவர் பலி யானார். இவர் யார் என்பது குறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை. தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் தமிழக கடத்தல் தொழிலாளர் கள், போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால், போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் பலியாயினர்.

இதனிடையே, செம்மரக் கடத்தலைக் கட்டுப்படுத்த பிரகாசம், நெல்லூர், கடப்பா, அனந்தபூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் வனத்துறையினருக்கு சனிக்கிழமை துப்பாக்கிகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT