இந்தியா

தமிழகம், புதுச்சேரியில் 3 இடங்கள்: மாநிலங்களவை எம்.பி. தேர்தல் தேதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் காலியாக இருக்கும் 2 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கும், புதுச்சேரியில் காலியாகும் மாநிலங்களவை இடத்துக்கும் அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஏற்கெனவே காலியாக இருந்த ஒரு இடத்திற்கு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் அப்துல்லா போட்டியின்றி வெற்றி பெற்றார்.

மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த அதிமுகவின் கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் இருவரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றனர். இதனையடுத்து, தங்களது மாநிலங்களவை எம்.பி., பதவியை இருவரும் ராஜினாமா செய்தனர். இதனால், காலியான இரு இடங்களுக்கும் வரும் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுபோலவே புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள கோகுல கிருஷ்ணனின் பதவிக்காலம் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. அந்த இடத்துக்கும் தேர்தல் அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த இரு மாநிலங்களை தவிர அசாம், மகாராஷ்டிரா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 3 மாநிலங்களி்ல் காலியாகவுள்ள தலா ஓரிடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கும் அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15- தொடங்குகிறது. 22-ம் தேதி முடிவடைகிறது. செப்ட்மபர் 23-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. செப்டம்பர் 27-ம் தேதி வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் எனவும் கூறப்பட்டுள்ளது. அக்.,4ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை உடனடியாக நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்

SCROLL FOR NEXT