இந்தியா

ரிசர்வ் வங்கி பணத்துடன் சென்ற லாரிகள் மோதிய விபத்தில் 5 பேர் காயம்

செய்திப்பிரிவு

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் பிற்பகல் ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்துக்கு 5 லாரிகள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்துடன் பலத்த பாதுகாப்புடன் சென்றன. மத்திய மார்க் என்ற இடத்தில் 5 லாரிகளும் வரிசையாக சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு லாரியின் குறுக்கே வாகனம் ஒன்று வந்ததால் அந்த லாரியின் டிரைவர் பிரேக் போட்டார். இதனால், அந்த லாரியின் பின்னால் வேகமாக அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த இரண்டு லாரிகள் ஒன்றின் மீது ஒன்று மோதிக் கொண்டன. இரண்டு லாரிகளின் டிரைவர்கள் மற்றும் 3 போலீஸார் என 5 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை போலீஸார் மீட்டனர். விபத்துக்கு உள்ளான லாரி ஒன்றில் இருந்த பெண் காவலர் புபிதா, காலில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT