இந்தியா

மாணவர் தற்கொலையில் அரசியல் செய்கிறது காங்கிரஸ்: மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கிண்டல்

பிடிஐ

பெருநகர ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

காங்கிரஸின் நீண்டகால தவறான ஆட்சி, வாக்கு வங்கி அரசி யல் ஆகியவை சமூக நல்லிணக் கத்தைப் பாதித்து விட்டன. அத னால்தான் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக சம்பவங்கள் (ரோஹித் வெமுலா தற்கொலை) நிகழ்கின்றன. இந்த பல்கலைக் கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட முதல் நபரல்ல ரோஹித். காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற 10 தற்கொலைகள் நடந்துள்ளன. அப்போது சோனியா, ராகுல், திக்விஜய் சிங் யாருக்கும் நேரமில்லை.

அப்போதெல்லாம் யாரும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்துக்கு வரவில்லை, தர்ணா நடத்தவில்லை. ஏனெனில் அப்போது நடந்தது உங்களின் ஆட்சி. அப்போது அமைதி யாக இருந்த நீங்கள், தற்போது ஆக்ரோஷமாக பேசுகிறீர்கள். இது கேலிக்கூத்து(தமாசு). காங் கிரஸ் சிரிப்பு அரசியல் செய்கிறது.

நீங்கள் ஆட்சியில் இல்லை என்ப தால், வேலையில்லாமல் இருக் கிறீர்கள். அதனால், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் இருக்கிறீர்கள். இது நகைச்சுவை இல்லையா?

கீழ்த்தரமான அரசியல் செய்யா தீர்கள். எங்களை அதுபோன்று செய்ய வைத்துவிடாதீர்கள். அந்த குழந்தைகளுக்கு அநீதி இழைக்க விடாதீர்கள். பல்கலைக்கழக வளா கத்தை அரசியலற்றதாக இருக்க விடுங்கள். இங்கு, கல்வியில் கவனம் செலுத்தப்பட வேண்டும், தங்களின் செயல்பாடுகளால் ரோஹித்தின் ஆன்மாவுக்கு அவர் கள் அநீதி செய்கிறார்கள்.

பல்கலைக்கழகங்கள் சாதி, மத அரசியல் மற்றும் சமூகத்துக்கு எதிரான செயல்பாடுகளிலிருந்து விலகியிருக்க முன்னெச்சரிக்கை மற்றும் உரிய நடவடிக்கை தேவை. அது அனைத்து அரசியல் கட்சி களின் கடமை. ஆனால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிக ளால் மட்டுமே கீழ்த்தரமான அரசி யலைச் செய்ய முடியும்.

SCROLL FOR NEXT