அரசமைப்புச் சட்டத்தின் புனிதத் தன்மையை குலையவிடாமல் பேணிக் காத்திட வேண்டும் என்று ஆளுநர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவுரை வழங் கியுள்ளார்.
ராஷ்டிரபதி பவனில் இரண்டு நாள் ஆளுநர்கள் மாநாட்டினை நேற்று தொடங்கிவைத்து அவர் ஆற்றிய உரை வருமாறு:
நமது தேசம் சுதந்திரம் அடைந்த தில் இருந்து நன்கு வளர்ச்சி பெற்று வலிமை அடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நமது அரசமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள கோட்பாடு களை எப்போதும் விடாமல் பின் பற்றுவதுதான். எப்போதைக்கும் நிலைத்து நிற்கக்கூடிய ஆவணம் அரசமைப்புச்சட்டம். நமது நாட்டின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கிறது இந்த ஆவணம். அவற்றை முழுமை யாக நிறைவேற்றுவதற்கான வழி முறைகளையும் உள்ளடக்கி உள்ளது. இந்த புனித நூலின் புனிதத்தன்மையை பேணிப் பாது காக்கும் கடமை அரசமைப்புச் சட்ட பதவிகளை வகிப்போர் அனைவருக் கும் உள்ளது.
வெளிநாட்டுத் தொடர்பு உள்ளதை தெளிவாக புலப்படுத்தக்கூடிய தீவிர வாத தாக்குதல்களை கடந்த ஆண் டில் நாம் கண்கூடாக பார்த்தோம். இது மனதுக்கு கடினமானதுதான்.தீர்க்கப்படாமல் உள்ள சர்வதேச பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலமும் சமரச முயற்சிகள் மூலமும் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை தொடர வேண்டும். உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்புப் பிரச்சினைகள், பருவநிலை மாற் றங்கள், பொருளாதார தேக்கம் போன்ற சவால்களை நாம் சந்தித்து வருகிறோம். சர்வதேச எல்லைகளை கொண்டுள்ள எல்லை மாநிலங்கள் தீவிரவாத தாக்குதல்களால் பாதிக் கப்பட்டுள்ளன. எனவே நாட்டை பாதுகாப்பதற்கான திறனை மேம் படுத்திக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து 2 ஆண்டாக பருவ மழை பற்றாக்குறையால் விவசாய உற்பத்தி மேலும் குறையக்கூடும். விவசாயிகளின் துயரை போர்க்கால அடிப் படையில் தீர்க்கவேண்டும்.
இந்தியாவில் தயாரிப்போம், தொடங்கிடு இந்தியா, பொலிவுறு நகரம், தூய்மை இந்தியா ஆகிய திட்டங்களை மத்திய அரசோடு இணைந்து மாநில அரசுகள் செயல் படுத்த வேண்டும். மத்திய அரசுக் கும் மாநில அரசுக்கும் இடையே ஆளுநர்கள் பாலமாக செயல்பட வேண்டும். நாடு முழுவதும் 320 அரசு பல்கலைக்கழகங்கள், 140 தனி யார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றின் மூலம் நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் ஆளுநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் மோடி பங்கேற்பு
இந்த மாநாட்டில் துணை குடி யரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் 23 மாநிலங்களின் ஆளு நர்கள், துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்றனர்.
அருணாச்சல பிரதேசத்தில் ஆளு நரின் பரிந்துரையின்பேரில் குடியர சுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் அரசமைப்புச் சட்டத்தின் புனிதத்தை காக்குமாறு ஆளுநர்களுக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்கியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.