இந்தியா

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த ரூ.5க்கு ஆயுர்வேத மருந்து

செய்திப்பிரிவு

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, 5 ரூபாயில் ஆயுர்வேத மருந்தை அறிவியல் மற்றும் தொழிற் துறை ஆராய்ச்சிக்கான கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) அறிமுகம் செய் துள்ளது.

நீரிழிவு நோய் 2 வகையாக உள்ளது. இன்சுலினை சார்ந்திருப் பவர்கள் முதல் வகையினர். 2வது வகையினர் மருந்துகளை உட்கொள் பவர்கள். இவர்களை டைப்-2 நீரிழி வால் பாதிக்கப்பட்டவர்கள் என்கின்றனர். இவர்கள் தங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, பிஜிஆர்-34 என்ற பெயரில் ஆயுர்வேத மருந்தை கடந்த புதன் கிழமை சிஎஸ்ஐஆர் அறிமுகம் செய்துள்ளது.

சிஎஸ்ஐஆர் கவுன்சிலின் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்பிஆர்ஐ), மத்திய மூலிகை செடிகள் ஆராய்ச்சி நிறுவனம் (சிஐஎம்ஏபி) ஆகிய 2 நிறுவனங்களும் இணைந்து நீரிழிவுக்கான இந்த புதிய ஆயுர் வேத மருந்தை கண்டுபிடித்துள்ளன.

இதுகுறித்து இவ்விரு பிரிவு களின் மூத்த முதன்மை விஞ்ஞானி மருத்துவர் ஏ.கே.எஸ்.ரவாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இந்தியாவில் 6 கோடிக்கும் அதிகமானோர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த பிஜிஆர்-34 ஆயுர்வே மருந்து பெரிதும் உதவும். இந்த மருந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், மற்ற மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தடுக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT