இந்தியா

கார்ப்பரேட் ஊழியர்களின் மன அழுத்தம் நீங்கி உற்சாகம் பெற ‘யோகா பிரேக்’ மொபைல் செயலி அறிமுகம்

செய்திப்பிரிவு

கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் மன அழுத்தம் நீங்கி உற்சாகமாக பணிபுரிய, ‘யோகா பிரேக்’ என்ற பெயரில் தனி செயலியை மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை பளு, குறித்த நேரத்தில் பணிகளை முடிக்கும் நிர்பந்தம் போன்ற காரணங்களால் மன அழுத்தத் துக்கு ஆளாகின்றனர். இந் நிலையில், அவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகை யில், ‘யோகா இடைவேளை’ (யோகா பிரேக்) என்ற பெயரில் புதிய மொபைல் செயலியை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்வானந்த சோனேவால் நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு மன அழுத்தத்துக்கு ஆளாகி வருவது அனைவரும் அறிந்ததே. அத்துடன், பணியின் தன்மையால் உடல்ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். மற்ற துறைக ளில் உள்ள ஊழியர்களும்கூட இதுபோன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

இவற்றை கருத்தில் கொண்டு, ‘யோகா பிரேக்’ என்ற மொபைல் செயலியை அரசு கொண்டு வந்துள்ளது. இதில் 5 நிமிட பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன. யோகா சனங்கள், பிராணயாமம், தியானம் போன்ற அம்சங்கள் இந்த செயலில் உள்ளன.

அவற்றை பின்பற்றி கார்ப்பரேட் ஊழியர்கள் தங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். புதிய உற்சாகத்துடன் தங்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். இதன்மூலம் உற்பத்தி திறன் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் நல்ல சூழலை உருவாக்க முடியும்.

யோகா தற்போது உலக அளவில் பிரபலமாகி விட்டது. மக்கள் ஆர்வத்துடன் யோகா பயிற்சி மேற்கொள்கின்றனர். இது மனதளவிலும் உடலள விலும் பயனளிப்பதை பலர் உணர்ந்துள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

‘யோகா பிரேக்’ மொபைல் செயலி அறிமுக நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ‘ஆஸாதி கா அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே ‘யோகா பிரேக்’ செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT