உத்தரபிரதேசத்தில் இரட்டை கோபுர அடுக்கு மாடி கட்டிடத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சூப்பர்டெக் நிறுவனத்தின் சார்பில் எமரால்ட் கோர்ட் என்ற பெயரில் 850 குடியிருப்புகளைக் கொண்ட 40 அடுக்குமாடி கோபுரம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், நொய்டா பெருநகர வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் இந்த முறைகேடான கட்டிடத்தை கட்ட ஒப்புதல் அளித்ததாகவும் கட்டிடத்தை இடிக்கவும் உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இரட்டை கோபுரஅடுக்கு மாடி கட்டிடத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கமுதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து யோகி ஆதித்யநாத் நேற்றுஆலோசனை நடத்தினார். அப்போது, முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது தேவைப்பட்டால் கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.