திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடனாக நடந்து சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். மலைப்பகுதியில் ‘முழங்கால் படி’ எனும் இடத்தில் திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் வாகனங்கள் செல்வது வழக்கம். இதனால் சிறிது தூரம் வாகனங்கள் செல்லும் சாலையில் பக்தர்கள் நடந்து செல்லவேண்டி உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை யில் பெங்களூருவைச் சேர்ந்த குமார் (26), மது (27) ஆகிய இருவரும் மலைப்பாதையில் திருமலைக்கு நடந்து சென்றனர். வழியில் முழங்கால் படி பகுதியில் சாலையோரம் அமர்ந்தனர் அப்போது, திருமலையில் இருந்து திருப்பதிக்கு வேகமாக சென்ற கார் இவர்கள் மீது மோதியது. படுகாயம் அடைந்த இருவரையும் தேவஸ்தான சிம்ஸ் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இருவரும் தங்களது கால்களை இழந்தனர்.
இது குறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்ப சிவ ராவ் கூறும்போது, “நடைபாதை வழியில் சாலை இருப்பதால், திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதால் இந்த விபத்து நடந் துள்ளது. இப்பாதையில் விரைவில் பாலங்கள் அமைக்க ஏற்பாடு செய் யப்படும். விபத்துக்குள்ளான பக்தர்களின் மருத்துவ செலவு முழுவதையும் தேவஸ்தானமே ஏற்கும்” என்றார்.