அரசு வேலைவாய்ப்புகள், கல்வி நிறுவனங்களில் தற்போது இடஒதுக் கீடு முறை கடைபிடிக்கப்படுகிறது. அதேபோல் தனியார் நிறுவனங்க ளிலும் இடஒதுக்கீடு வழங்க வேண் டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெரிய நிறுவனங் கள், மருத்துவமனைகள், பள்ளிகள், அறக்கட்டளைகள் போன்றவற்றில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து பிற்படுத்தப்பட் டோர் ஆணைய உறுப்பினர் ஷகீல் உஸ்மான் அன்சாரி நேற்று செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘அரசு வேலைவாய்ப்புகள் கணிசமாக குறைந்த விட்ட சூழ்நிலையில், தனி யார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எனவே, தனியார் நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடி யினத்தவருக்கு மட்டுமன்றி, இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
தற்போது திறமையின் அடிப்படையில், தங்களுக்கு தேவையான ஆட்களை தனியார் நிறுவனங்கள் பணி நியமனம் செய்து வருகின்றன. இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்தால், திறமை என்பது இரண்டாம்பட்சமாகி தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் இந்த இடஒதுக்கீட்டுக்கு தொழிற்துறையினரிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.