மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற கலவரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மேலும் 7 முதல் தகவல் அறிக்கைகளை (எப்ஐஆர்) நேற்று பதிவு செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதற்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரே காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியது. இந்நிலையில் இந்த வழக்குகளை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கொலை, கூட்டு பாலியல் பலாத்காரம், கொலை முயற்சி என பல்வேறு பிரிவுகளின் கீழ் 28 எப்ஐஆர்களை சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று மேலும் 7 எப்ஐஆர்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனிடையே நாடியா மாவட்டம் சாப்ராவைச் சேர்ந்த பாஜக தொண்டர் தர்மா மண்டல் கொலை வழக்கில் 2 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். -பிடிஐ