இந்தியா

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

செய்திப்பிரிவு

மாரடைப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில முதல்வரும், காங்கிரஸின் மூத்தத் தலைவருமான அசோக் கெலாட்டுக்கு எழுபது வயதாகிறது. அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்று ஏற்பட்டது. தொற்றிலிருந்து மீண்ட பிறகும், உடல் ரீதியாக கடும் பாதிப்பை எதிர்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில், அவரது இதயக் குழாயில் 90 சதவீதம் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அவர் மருத்துவமனையிலிருந்து தன்னுடைய வீட்டுக்குத் திரும்பியுள்ளார். வீட்டில் மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT