இந்தியா

விமானப்படை தளங்களில் அத்துமீறி சுவர் ஏறுபவர்களை கண்டவுடன் சுட உத்தரவு

பிடிஐ

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப் பட்டதை அடுத்து மேற்கு பிராந்திய விமானப்படை தலைமையகத்தின் கீழ் வரும் அனைத்து தளங்களிலும் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட் டுள்ளது. இதன்படி சுற்றுசுவர்கள் மீது ஏறுவோரை கண்டவுடன் சுட்டுத் தள்ள உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது.

இது குறித்து விமானப்படை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மேற்கு பிராந்திய விமானப்படை தலைமையகத்தின் கீழ் வரும் அனைத்து தளங்களிலும் உஷார் நிலை மேற்கொள்ளும்படி அறிவுறுத் தப்பட்டுள்ளது. அதன்படி விமானப் படை தளங்களின் சுற்றுச்சுவர் மீது அத்துமீறி யார் ஏறினாலும், அவர் களை கண்டவுடன் சுட்டு தள்ளும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும் முன்னெச்சரிக்கை காரணமாக விமானப்படை தளங் களில் இருந்து 100 மீட்டர் தொலை வுக்கு கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டிப்பாக கடைப்பிடிக்க உத்தர விடப்பட்டுள்ளது. தவிர நாடு முழுவதும் உள்ள 54 முக்கிய தளங் களில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்வதற்கான நடை முறைகளை இறுதி செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT