இந்தியா

இணைய சமநிலை: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

பிடிஐ

தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருவதாக சாக்கு கூறி, இணைய சமநிலை தொடர்பாக மத்திய அரசு முடிவை தாமதப்படுத்தி வருவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

காங்கிரஸ் எப்போதும் இணைய சுதந்திரத்தின் பக்கம் நிற்கிறது. இணைய சேவை வழங்குநர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசு ஆகியவை இணைய சமநிலையில் அனைத்து டேட்டாக்களையும் கையாள வேண்டும்.

இணையம் பெருநிறுவனங் களால் கட்டுப்படுத்தப்படுவதை, டிஜிட்டல் இந்தியா என்ற வார்த்தைப்போர்வையில் பிரதமர் மோடியால் மறைக்க முடியாது. டிஜிட்டல் இந்தியா என்பது, பொதுப் பயன்பாட்டுக்கான இணைய தொடர்பு அனைத்துத் தரப்பினருக்குமானது.

இணைய பயன்பாட்டாளர்கள் தாங்கள் விரும்பும் எந்தவொரு தளத்தையும் கட்டுப்பாடின்றி பார்க்க உரிமையுடையவர்கள் என்பதில் காங்கிரஸும், நானும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

ஏழ்மையை ஒழிக்க இணையம் சக்திவாய்ந்த கருவி என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு ராகுல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT