பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

பள்ளிகள் திறப்பு: தடுப்பூசி செலுத்தவில்லை; குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை: எய்ம்ஸ் மருத்துவர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

நமது குழந்தைகள் விஷயத்தில் நாம் தான் கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற எய்ம்ஸ் மருத்துவர் நவீத் விக் கூறியுள்ளார். கரோனா தொற்று குறையும் சூழலில் நாடுமுழுவதும் பள்ளிகளை மீண்டும் திறப்பதில் கவனம் செலுத்தப்படும் நிலையில் அவர் இதனை கூறியுள்ளா்.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் கரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக நாடுமுழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் மட்டும் 10, 12ம் வகுப்புத் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. ஆனால், மாணவர்கள் சிலர் கரோனாவில் பாதிக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிuக நடவடிக்கையாக பள்ளி்க்கூடங்கள் மூடப்பட்டன.

இதனால், கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் நடக்காமலேயே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மத்தியஅரசின் அறிவிப்பைத் தொடர்ந்து பல மாநிலங்களும் இதையே கடைபிடித்தன. கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலேயே ஆன்-லைன் வகுப்புகளைப் படித்து முடங்கி இருக்கும் மாணவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளன. தொற்று குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

பிரதிநிதித்துவப் படம்


இந்தநிலையில் எய்ம்ஸ் மருத்துவர் நவீத் விக் கூறியுள்ளதாவது:

"கரோன சூழலில் வீட்டில் ஆன்லைன் மூலம் கற்கும் குழந்தைகள் வீட்டில் சோர்வாக இருந்தாலும், பள்ளிகளில் சேர்வதால் ஏற்படும் அபாயங்களைப் பார்ப்பது முக்கியம்.

நாம் நன்மை தீமைகளை எடைபோட வேண்டும். குழந்தைகளுக்கு வீட்டில் கற்கும் சூழல் பற்றி பேசும் நாம், நாம் அபாயங்களையும் பார்க்க வேண்டும். வீட்டில் கல்வி வழங்குவதை நாம் அறிவோம். ஆனால் . இந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. அவர்கள் பள்ளிக்கு சென்றவுடன் அவர்களை நாம் தடுப்பூசி போடாத நபர்களாக நடத்த வேண்டும். இதனை மறந்து விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT