நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,658 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில், 30,007 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில், 496 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மட்டும் 162 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 44,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த பாதிப்பு 3,26,03,188 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவில் இருந்து 3,18,21,428 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தி்ல் 32,988 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,44,899 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 496 பேர் நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,36,861 என்றளவில் உள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் மொத்த எண்ணிக்கை 61,22,08,542 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 79,48,439 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு:
கேரளாவில் அண்மைகாலமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கே நேற்று முன் தினம் ஒரே நாளில் 31,445 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. நேற்றும் கரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது.
கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.