மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்முடிவுகள் கடந்த மே 2-ம் தேதிவெளியானது.
இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றபோதும் முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். ஆத்திரமடைந்த திரிணமூல் தொண்டர்கள் பல இடங்களில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தினர். பலர் கொல்லப்பட்டனர். வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன.
தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த வாரம்உத்தரவிட்டது. மேலும் மாநிலபோலீஸின் சிறப்பு விசாரணைக்குழுவும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
அதன்படி, கலவரம் குறித்துவிசாரிக்க நான்கு சிறப்பு குழுக்களை சிபிஐ அமைத்தது. கலவரம் தொடர்பாக விசாரணையையும் சிபிஐ தொடங்கிஉள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கலவரம் குறித்து 9 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக டெல்லியில் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் சிறப்புக் குழுவினர் வன்முறை நடந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருவதாகவும் சிபிஐ அதி காரிகள் கூறியுள்ளனர். விசாரணை தொடர்பான அறிக்கையை 6 வாரங்களில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.-பிடிஐ