இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 60 கோடியை கடந்தது.
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 59 கோடியைக் கடந்தது. மொத்தம் 65,52,748 முகாம்களில் 59,55,04,593 தடுப்பூசிகள் போடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் இன்று 60 கோடி என்ற எண்ணிக்கையை கடந்ததாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,17,54,281 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 34,169 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் விகிதம் 97.67சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தொடர்ந்து 59 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,22,327 ஆக உள்ளது இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 0.99 சதவீதம் மட்டுமே ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 17,92,755 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 51,11,84,547 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விகிதம் 1.92 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.10 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 30 நாட்களாக அன்றாட தொற்று உறுதி விகிதம் 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 79 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.