சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு 0.25 சதவீத வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச் சகம் நேற்று வெளியிட்டுள்ளது. ஒன்று, இரண்டு, மூன்று ஆண்டுக் கான குறுகிய கால வைப்பு திட்டங் கள், கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் தொடர் வைப்பு திட்டங்களுக்கு 0.25 சதவீதம் வட்டி குறைக் கப்படும் என அறிவித்துள்ளது.
எனினும் பிபிஎப், ஐந்து ஆண்டு தேசிய சேமிப்பு பத்திரம், மாதாந் திர வருமான தொடர் சேமிப்புத் திட்டங்களுக்கு இந்த வட்டிக் குறைப்பு செய்யப்படவில்லை.
சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் அரசு பத்திரங்களுக்கு இணையாக இருக்கும். வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும்.