ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் கண்ணயயா குமார், டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் எஸ்ஏஆர் கிலானி உள்ளிட்ட சிலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுள்ளது.
இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் வினீத் தண்டா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், “நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது ‘நீதி படுகொலை’ என கண்ணய்யா, கிலானி உள்ளிட்டோர் கூறியுள்ளனர். இதன் மூலம் தீர்ப்பு வழங்கிய இந்த நீதிமன்றத்தை அவர்கள் அவமதித்துள்ளனர். எனவே, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
கடந்த 9-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) வளாகத்தில் அப்சல் குருவின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் விநியோகிக்கப்பட்ட நோட்டீஸில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.