சியாச்சின் பனிமலையில் இருந்து இந்தியா படைகளை வாபஸ் பெற்றுக் கொள்ளாது என ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவ வீரர்கள் இரவு பகலாக எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி 10 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஆபத்தான அந்த பகுதியில் இருந்து மத்திய அரசு படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கருத்து எழுந்தது. நாடாளுமன்ற மக்களவையிலும் நேற்று இந்த பிரச்சினை எழுப் பப்பட்டது.
இதற்கு ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் பதில் கூறிய தாவது:
சியாச்சினை ஆக்கிரமிக்க மாட்டோம் என்ற பாகிஸ்தானின் உறுதிமொழியை எப்படி நம்புவது? சியாச்சின் பனிமலையில் இருந்து நமது படைகளை வாபஸ் பெற்றுக் கொண்டால், உடனடியாக பாகிஸ்தான் தன் படைகளை அங்கு நிறுத்திக் கொள்ளும். சியாச்சின் பனிமலை நமது நாட்டுக்கு மிகவும் முக்கியமான பகுதி. அந்த பகுதிக்காக கடந்த 32 ஆண்டுகளில் 915 வீரர்களை நாம் இழந்து இருக்கிறோம். ஆண்டுதோறும் 28 வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய் துள்ளனர். உயிரிழப்பை தடுக்க சராசரியை விட, ஆறு மடங்கு அதிகமான மருத்துவ வசதிகள் சியாச்சின் வீரர்களுக்கு வழங்கப் பட்டு வருகிறது. இதனால் உயிரிழப் புகள் ஆண்டுக்கு 10 ஆக குறைந் துள்ளது. மேலும் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வீரர் களுக்கு 19 வகையான உடை களும் பனிசறுக்கு ஸ்கூட்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆபத்தான பகுதிகளில் பணியாற்றும் ராணுவ வீரர் களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படுகிறதா என்ற மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த மனோகர் பாரிக்கர், ‘‘ஆபத்தான பகுதிகளில் பணியாற்றும் வீரர்களுக்கு போதிய அளவுக்கு பலன்களை அளிக்கும் வகையில் 7வது சம்பள கமிஷனில் பரிந் துரை செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.