உலக புகழ்பெற்ற அமர்நாத் கோயில் வாரியத்துக்கு அலுவல கம் மற்றும் யாத்திரி நிவாஸ் கட்டுவதற்கு 3.5 ஏக்கர் நிலத்தை காஷ்மீர் நிர்வாகம் குத்தகைக்கு ஒதுக்கி உள்ளது.
காஷ்மீர் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் இயற்கையாக பனி லிங்கம் உருவாகிறது. லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். இந்த கோயிலை அமர்நாத் கோயில் வாரியம் நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், கோயில் வாரியத்துக்கு அலுவலகம் கட்டுவதற்கும், பக்தர்கள் தங்குவதற்கு யாத்திரி நிவாஸ் கட்டுவதற்கும் 3.5 ஏக்கர் நிலத்தை (25 கனால் - 8 கனால் சேர்ந்தது ஒரு ஏக்கர்) காஷ்மீர் நிர்வாகம் ஒதுக்கி ஆணை பிறப் பித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட ஆணையில் கூறப்பட்டுள்ளதாவது:
அமர்நாத் கோயில் வாரியத் துக்கு 40 ஆண்டுகள் குத்தகைக்கு 25 கனால் நிலம் ஒதுக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு கனால் ரூ.10 வாடகை என்ற அடிப்படையில் குத்தகை இருக்கும். இந்த நிலம் நகர் மாவட்டம் பந்தாசவுக் என்ற பகுதியில் ஒதுக்கப்படும். இந்த நிலத்தை அலுவலகம் மற்றும் யாத்திரி நிவாஸ் கட்டுவதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். வேறு எதற்கும் நிலத்தை பயன்படுத்த அனுமதி இல்லை.
அமர்நாத் கோயில் வாரியம் மற்றும் காஷ்மீர் அரசுக்கு இடை யிலான குத்தகை ஒப்பந்தத்தில், நகர் மாவட்ட ஆட்சியர் கையெழுத்திடுவார். இந்த நிலம்ஜம்மு காஷ்மீர் நில ஒதுக்கீடுசட்டம் 1960-ன்படி நிர்வகிக்கப்படும்.
இவ்வாறு அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமர்நாத் கோயில்வாரிய தலைவரும், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநருமான மனோஜ் சின்கா கூறும்போது, ‘‘பந்தாசவுக் பகுதியில் 18 மாதங்களுக்குள் அலுவலகம், யாத்திரி நிவாஸ் கட்டப்படும். அங்கு 3,000 பக்தர்கள் தங்கும்அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். அத்துடன், பக்தர்களின் தகவல் மையமாகவும் இந்த புதிய கட்டிடம் செயல்படும். ஜம்முவிலும் இதேபோல் 3,200 பேர் தங்கும் வசதியுடன் யாத்திரி நிவாஸ் கட்டப்படும்’’ என்றார்.
கடந்த 2008-ம் ஆண்டு காங் கிரஸ் சார்பில் ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்த குலாம் நபி ஆசாத், அமர்நாத் குகை கோயிலுக்கு செல்லும் பாதையை கான்கிரீட் சாலையாக மாற்ற அனுமதி அளித்தார். அதற்கு மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அத்துடன், காங்கிரஸ் கூட்ட ணியில் இருந்து பிடிபி தலைவர் மெகபூபா முப்தி விலகினார். இதனால் குலாம் நபி ஆசாத் பதவி இழந்தார். அதன்பின் காஷ்மீர் ஆளுநராக பொறுப்பேற்ற என்.என்.வோரா, கான்கிரீட் சாலை அமைக்க பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற்றார் என்பது குறிப் பிடத்தக்கது.