இந்தியா

சித்துவுக்கு அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து தனது ஆலோசகர்களாக மல்வீந்தர் மலி, பியாரேலால் கார்க் ஆகியோரை சமீபத்தில் நியமித்தார்.

மல்வீந்தர் மலி கடந்த வாரம் அளித்த பேட்டியில், காஷ்மீர் சுதந்திரமான நாடு என்றும் அதை இந்தியாவும் பாகிஸ்தானும் ஆக்கிரமித்துள்ளன என்றும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து முதல்வர் அம்ரீந்தர் சிங் நேற்று கூறுகையில், ‘‘காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதி. அதைதனிநாடு என்று கூறுவது தேசவிரோதம். தனக்கு ஓரளவு மட்டுமே தெரிந்த விஷயங்களை வைத்துக் கொண்டு உணர்வுபூர்வமான தேசிய பிரச்சினைகளை பேசக் கூடாது. இந்தியாவின் நலனுக்கு எதிராக மேலும் பேசுவதற்கு முன்பாக நவ்ஜோத் சிங் சித்து தனது ஆலோசகர்களை அடக்கிவைக்க வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT