வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத் தாளர் தஸ்லிமா நஸ்ரின் கடந்த 1994-ம் ஆண்டு எழுதிய நாவல் சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளி யேறி இந்தியாவில் வசித்து வரு கிறார். கேரள மாநிலத்தில் நடை பெற்ற இலக்கிய திருவிழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
இந்தியாவில் சகிப்புத் தன்மை இல்லை என நான் கருதவில்லை. பெரும்பாலான மக்கள், மற்ற வர்களின் நம்பிக்கை, வழிபாடுகள் மீது சகிப்புடன் இருப்பதாகவே எண்ணுகிறேன்.
இந்தியாவில் உள்ள சட்டம் சகிப்பின்மையை ஆதரிக்க வில்லை. இருப்பினும் சகிப்புத் தன்மையற்ற பலர் இங்கு இருக் கின்றனர். இந்தியாவில் உள்ள மதச்சார்பற்றவர்கள் ஏன் இந்து அடிப்படைவாதிகளை மட்டும் குறிவைத்து கேள்வி எழுப்புகின்ற னர். முஸ்லிம் பழமைவாதிகளை விட்டுவிடுகின்றனர்.
இந்தியாவில் நிஜமான மோதல் எதுவெனில், மதச்சார் பற்ற தன்மைக்கும், அடிப்படை வாதத்துக்கும்தான்; சுதந்திரத் துக்கு மதிப்பளிப்பவர்களுக்கும், அளிக்காதவர்களுக்கும்தான்.
மத அடிப்படைவாதிகள், மதத்தில் சிலவற்றைத் திரித்துச் சேர்த்துவிட்டதால் அனைத்து மதங்களுமே பெண்களுக்கு எதிரானவையாக உள்ளன.
அரசாங்கத்திலிருந்து மதத்தை தனியே பிரித்து வைக்க வேண்டும். அரசு நடைமுறை களில் மதத்தின் தாக்கம் இருந்த தால்தான் வங்கதேசத்தில் இந்து, முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்பட் டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
5 நாட்கள் நடைபெற்ற இலக்கிய திருவிழா நேற்று நிறைவடைந்தது.