இந்தியா

பிரதமர் செல்லும் பாதையில் பூந்தொட்டியை வீசி எறிந்த பெண்ணிடம் விசாரணை

விஜைதா சிங்

பிரதமர் மோடி செல்லும் பாதையில் பூந்தொட்டியை வீசி எறிந்த பெண்ணை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் சவுத் பிளாக்கில் பிரதமர் அலுவலகம் உள்ளது. அங்கு வந்த ஒரு பெண் பிரதமரை பார்க்க வேண்டும் என கோரியிருக்கிறார். ஆனால், அவருக்கு அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி தரவில்லை.

அந்தவேளையில் பிரதமர் அலுவலகம் வருவதாக இருந்ததால், அவர் வரும் பாதையை சுற்றி தடுப்பு வேலிகள் வைத்து போலீஸார் மறைத்தனர். அப்போது அந்தப் பெண் யாரும் எதிர்பாராமல் அருகில் இருந்த ஒரு பூந்தொட்டியை எடுத்து பிரதமர் வரும் பாதையில் தூக்கி எறிந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் இது திட்டமிட்டு செய்யப்பட்ட சதிச் செயல் அல்ல பிரதமரை பார்க்க அனுமதி மறுத்ததால் விரக்தியில் அப்பெண் செய்த செயலே என்றனர்.

SCROLL FOR NEXT