இந்தியா

திருப்பதியில் நாட்டு குண்டு வெடித்ததால் பதற்றம்

செய்திப்பிரிவு

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலைக்கு தீவிரவாத அச்சுறுத் தல் இருப்பதால் ஆக்டோபஸ் கமோண்டோ படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருப்பதியில் உள்ள கபில தீர்த்தம் அருகே நேற்று காலை திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. அப்பகுதி முழுவதும் புகை மண்டல மாக மாறியது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பீதியடைந்து பாது காப்பான இடம் நோக்கி ஓடினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத் துக்கு விரைந்து வந்த அலிபிரி போலீஸார் மோப்ப நாய் உதவி யுடன் அங்கு தீவிர சோதனை மேற் கொண்டனர். அதில் வெடித்தது நாட்டு வெடிகுண்டுகள் என தெரிய வந்தது. மேலும் அந்த நாட்டு வெடி குண்டுகளை மர்ம நபர்கள் யாரோ வீசிச் சென்றதும் கண்டுபிடிக்கப் பட்டது. மர்ம நபர்கள் குறித்து போலீ ஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய பகுதியில், நிகழ்ந்த இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT