உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா | கோப்புப்படம் 
இந்தியா

நீதிபதிகள் நியமனம் புனிதமானது, புரிந்து கொள்ளுங்கள்: ஊடகங்கள் குறித்து தலைமை நீதிபதி வேதனை

பிடிஐ

உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் 9 நீதிபதிகளுக்கான இடங்கள் குறித்து கொலிஜியம் பரிந்துரைத்துள்ளதாக ஊடகங்களில் ஊகத்தின் அடிப்படையில் செய்து வெளியானது துரதிர்ஷ்டம், வேதனைக்குரியது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் இடங்கள் காலியாக இருக்கின்றன. இதற்கான 9 பேரை கொலிஜியம் தேர்வு செய்துள்ளதாக செய்திகள் பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகின. 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகள் பெயரும் வெளியானது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி நவின் சின்ஹா ஓய்வு பெறுவதையடுத்து, அவருக்கான பிரிவு உபசார விழா இன்று டெல்லியில் நடந்தது. இதில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்கும் பணி என்பது புனிதமானது, கவுரவமும் அதில் அடங்கியுள்ளது. இதை ஊகடங்கள் கண்டிப்பாகப் புரிந்து கொண்டு, அந்த புனிதத்தை அங்கீகரிக்க வேண்டும்.

இன்று சில ஊடங்களில் நீதிபதிகள் நியமனம் குறித்து பல்வேறு ஊகச் செய்திகள் வெளியானது துரதிர்ஷ்டம்.

ஆனால், கொலிஜியம் தொடர்பான பணிகள் இன்னும் நடந்து வரும் நிலையில் அதை முறைப்படுத்துவதற்கு முன் இதுபோன்ற செய்திகள் தேவையற்றது. இத்தகைய பொறுப்பற்ற அறிக்கைகள், ஊகங்கள் காரணமாக திறமை கூட சில நேரங்களில் மங்கிவிடுகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டமானது, இந்த செய்தால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன்.

நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் குறித்து உங்களுக்குத் தெரியும். அதற்கான செயல்முறைகள் நடந்து வருகின்றன, ஆலோசனைக் கூட்டங்கள் நடக்க உள்ளன. முடிவுகளும் எடுக்கப்பட உள்ளன. நீதிபதிகள் நியமனம் என்பது புனிதமான செயல்பாடு, அதில் சில கண்ணியமும் அடங்கியுள்ளது.

என்னுடைய ஊடக நண்பர்கள் அந்த புனிதத்தன்மை புரிந்து கொண்டு அங்கீகரிக்கப்பீர்கள் என நம்புகிறேன். ஊடகங்களுக்கான சுதந்திரம், தனியுரிமை ஆகியவற்றை அதிகமாக மதிக்கிறோம்.

பெரும்பாலான மூத்த பத்திரிகையாளர்களுக்கு முதிர்ச்சியும், மிகப்பெரிய அளவிலான பொறுப்பும் இருக்கிறது. ஊடகங்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும், இதுபோன்ற மிக முக்கியமான விஷயத்தில் ஊடகங்கள் வெளியிடக்கூடாது. ஜனநாயகத்தில் தொழில்முறையிலான பத்திரிகையாளர்கள், நெறிகளுடன் செயல்படும் ஊடகங்கள்தான் உச்ச நீதிமன்றத்தின் பலமாகும்.

நீங்களும் நீதிமன்ற செயல்முறையில் ஒருபகுதி. ஆதலால் நீதிமன்றத்துக்கு பொறுப்பான அனைவரும், அதன் நம்பகத்தன்மை, மாண்பைக் காக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் வேறுவிதமாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்கிறேன். என்னுடைய ஆதங்கத்தை சகோதரர் சின்ஹா புரிந்து கொள்வார்.
இவ்வாறு என்.வி.ரமணா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT