சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி வித்தியாச மான தலைப்பாகையை அணிந்து காட்சியளித்தார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நேற்றுஉற்சாகத்துடன் கொண்டாடப்பட் டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது அவர் வித்தியாச மான தலைப்பாகையை அணிந்திருந்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. பகாடி பாரம்பரிய வகையிலான தலைப்பாகையாகும் அது. மேலும் வண்ண மயான கோலாப்பூரி தலைப்பாகை டிசைனில் அது அமைந்திருந்தது. தலைப்பாகையின் வால்பகுதி யானது நீண்டதாக இருந்தது. அதற்கு ஏற்றார்போல் அவர் நீலவண்ண அரைக்கை குர்தாவை அணிந்திருந்தார்.
2014-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவின்போது சிவப்பு நிற ஜோத்பூரி தலைப்பாகையையும், 2015-ல் மஞ்சள் நிற தலைப்பாகை யையும், 2017-ல் சிவப்பு, மஞ்சள் நிற தலைப்பாகையையும், 2018-ல்காவி, சிவப்பு நிற தலைப்பாகை யையும், 2019-ல் மஞ்சள் தலைப்பாகையையும், 2020-ல் இளஞ்சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த தலைப்பாகையையும் அவர் அணிந்திருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதின, குடியரசு தின கொண் டாட்டங்களின்போது வித்தியாச மான தலைப்பாகையை அணிந்து வரும் பழக்கத்தை பிரதமர் மோடி கடைப்பிடித்து வருகிறார்.