பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத் துறை திருத்த சேவை விருதுகள்: மத்திய அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத் துறையினருக்கான திருத்த சேவை விருதுகள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த சிறைத் துறையினர் 4 பேர் உட்பட, 41 பேருக்கு, சிறப்பாக பணியாற்றியது, போற்றத்தக்க வகையில் பணியாற்றியதற்கான திருத்த சேவை விருதுகள் வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக சிறைத்துறையைச் சேர்ந்த உதவி சிறைக்காவலர்கள் ஜி. முனிராஜா, கே. பாண்டி, ஜி. பெருமாள், தலைமை வார்டர் என். குமாரவேல் ஆகியோர் போற்றத்தக்க வகையில் பணியாற்றியதற்கான திருத்த சேவை விருதுகளைப் பெறுகின்றனர்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT