மருத்துவர்களின் முக்கிய கருவியான ஸ்டெதஸ்கோப்பை கண்டுபிடித்த ரேனே லான்நெக்கின் 235வது பிறந்த தினத்தை யொட்டி கூகுள் இணையதளம் டூடுள் வெளியிட்டு கவுரவித்துள்ளது.
மனிதர்களின் இதய துடிப்பை கண் டறிந்து அதற்கேற்றபடி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.ஸ்டெதஸ்கோப் கண்டறியப்படாத காலத்தில் மருத்துவர் கள் நேரடியாக தங்களது காதுகளை நோயாளியின் மார்பின் மீது வைத்து இதய துடிப்பை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். இதனால் பெண் நோயாளி களுக்கும், உடல் மெலிந்த நோயாளி களுக்கும் கடும் சிரமங்கள் ஏற்பட்டன.
இதற்காக புதிய கருவியை உருவாக்க வேண்டும் என பிரெஞ்சு மருத்துவர் ரேனே லான்நெக் துடித்துக் கொண்டிருந்தார். இதற்கான வழி 1816-ம் ஆண்டில் அவருக்கு தோன்றியது. இரண்டு குழந்தைகள் நீளமான குச்சியை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு குழந்தை குச்சியின் ஒரு முனையை தனது காதில் வைத்துக் கொண்டு, மறு முனையில் இருக்கும் குழந்தையின் பேச்சுக்குரலை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தது. இந்த காட்சியை கண்டதும் மருத்துவர் ரேனே வுக்கு புதிய யோசனை உதயமானது.
உடனடியாக தன்னிடம் வந்த ஒரு நோயாளியின் மார்பில் காகித்தை சுருட்டி வைத்து, மறுமுனையை தனது காதில் வைத்துக் கேட்டார். அப்போது இதய துடிப்பு சீராக கேட்டது. இதை ஆதாரமாக வைத்து இதயத்தின் துல்லியமான துடிப்பை உணருவதற்கான முழு வடிவ ‘ஸ்டெதஸ்கோப்பை’ உருவாக்கினார்.
மருத்துவர்களின் முக்கிய கருவியை கண்டுபிடித்த அந்த மாமேதையின் 235-வது பிறந்த தினம் நேற்று கொண்டா டப்பட்டது. இதையொட்டி ரேனேவை கவுரவிக்கும் வகையில் அவர் முதலில் கண்டுபிடித்த காகித ஸ்டெதஸ்கோப்பை யும், அதன் பின் மேம்படுத்தப்பட்ட குழாய் வடிவிலான ஸ்டெதஸ்கோப்பையும் டூடுலாக வெளியிட்டு, கூகுள் நிறுவனம் கவுரவித்துள்ளது.