இந்தியா

நாட்டிலேயே முதலாவதாக மகாராஷ்டிராவில் புதிய டெல்டா பிளஸ் கரோனா வைரஸால் 3 பேர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

நாட்டிலேயே முதலாவதாக மகா ராஷ்டிராவில் புதிய கரோனா டெல்டா பிளஸ் வைரஸால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங் கியது. முதல் கரோனா அலை கடந்த ஆண்டு செப்டம்பரில் உச்சத்தை தொட்டது. அதன்பிறகு வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்தது.

கடந்த பிப்ரவரி இறுதியில் கரோனா 2-வது அலை தொடங்கி, ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை எட்டியது. அப்போது சில நாட்கள் தினசரி தொற்று 4 லட்சத்தை தாண்டியது. இந்தியாவின் கரோனா 2-வது அலைக்கு டெல்டா வகை வைரஸே காரணம் என்பது ஆய்வில் தெரியவந்தது.

இதன்பிறகு டெல்டா வைரஸில் மரபணு மாற்றம் ஏற்பட்டு டெல்டா பிளஸ் என்ற வைரஸ் கண்டறியப்பட்டது. இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை.

இந்த சூழலில், மகாராஷ்டி ராவில் கடந்த சில வாரங்களாக டெல்டா பிளஸ் வைரஸின் வீரியம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஜூன் 13-ம் தேதி இந்த வைரஸ் பாதிப்பால் ரத்னகிரியில் 80 வயது மூதாட்டியும், கடந்த ஜூலை 27-ம் தேதி மும்பையை சேர்ந்த 63 வயது பெண்ணும் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் ராய்காட் பகுதியில் நேற்று 69 வயது பெண் டெல்டா பிளஸ் வைரஸால் உயிரிழந்தார்.

இதுகுறித்து மகாராஷ்டிர சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறும்போது, ‘‘டெல்டா பிளஸ் வைரஸால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மும் பையை சேர்ந்த 63 வயது பெண், இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுள்ளார். கரோனா நோயாளிகளின் மாதிரி கள் அவ்வப்போது மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன. அந்த மாதிரிகளின் ஆய்வறிக்கைபடி ஒவ்வொரு மாதமும் 100 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவருகிறது. இந்த வகை வைரஸ் பரவலை தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளோம்’’ என்று தெரிவித்தன.

SCROLL FOR NEXT