இந்தியா

ட்விட்டர் இந்தியா தலைவர் மணீஷ் மகேஸ்வரிக்கு புதிய பொறுப்பு

செய்திப்பிரிவு

ட்விட்டர் இந்தியாவின் தலைவராக இருந்த மணீஷ் மகேஸ்வரிபுதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை மையப்படுத்தி அவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

டூல்கிட் விவகாரத்தில் மணீஷ் மகேஸ்வரி மத்திய அரசு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. ஒரு வேலையையோ அல்லது பிரச்சாரத்தையோ மேற்கொள்வதற்கு அது குறித்த தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணமே டூல் கிட் எனப்படுகிறது. பொதுவாக இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் போது, அதில் பங்கெடுப்பவர்களுக்கு அந்த பிரச்சாரத்தினை எப்படி முன்னோக்கி நகர்த்துவது என்பதற்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய டூல் கிட் பயன்படுத்தப்படுகிறது. இந்த டூல் கிட் விவகாரத்தை முன்னிலைப்படுத்தி மணீஷ் மகேஸ்வரிக்கு கடும் நெருக்கடிகள் உண்டாகின.

இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவான பிரச்சார வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய அப்படி ஒரு டூல் கிட்டைத் தான் பிப்ரவர் 4 அன்று சுவீடனைச் சேர்ந்த புகழ்பெற்ற இளம் சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

கிரேட்டா துன்பர்க் மீது வழக்குப் பதிவு செய்தது. உடனே இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டவர்கள் யாரும் கருத்து தெரிவிக்கத் தேவையில்லை என்றும், அது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் பாலிவுட் சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஒரே கருத்தை தெரிவித்தனர்.

இதனால், டூல் கிட மணீஷ் மகேஸ்வரிக்கு தலைவலியை ஏற்படுத்தியது.

அதேபோல், ஏத்தியஸ்ட் ரிபப்ளிக் என்ற அமைப்பின் ட்விட்டர் கணக்கில் இந்து கடவுளான காளியை அவமதித்துள்ளதாகவும், சமூகத்தில் மதவெறுப்பை தூண்டும் வகையில் அது பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் இஸ்லாமியர் ஒருவர் தாக்கப்படுவதாக வெளியான வீடியோ பதிவு, ட்விட்டர் இணையதளத்தில் தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்டது ஆகியன தொடர்பாக மணீஷ் மகேஸ்வரி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இப்படியாக வழக்குகள், விசாரணைகள் என்று சிக்கித் தவித்த அவருக்கு தற்போது ட்விட்டர் நிறுவனம் புதிய பொறுப்பை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டரின் ஜப்பான், தென் கொரியா, ஆசியா பசிபிக் பிராந்தியத்தின் துணைத் தலைவர் யூசசமோட்டோ, "இந்தியாவில் 2 வருடங்களுக்கும் மேலாக தலைமைப் பொறுப்பிலிருந்த தங்களுக்கு நன்றி. தங்களை வருவாய் வழிகாட்டுதல், உலகளாவிய வியாபாரப் பிரிவுக்குப் பொறுப்பாளராக நியமிக்கிறோம். வாழ்த்துகள். ட்விட்டரின் மிக முக்கியமான பதவியில் நீங்கள் அமரவிருக்கிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT