இந்தியா

5-வது நாளாக துப்புரவு தொழிலாளர்கள் ஸ்டிரைக்: டெல்லியை சுத்தம் செய்த ஆம் ஆத்மி அமைச்சர், எம்எல்ஏக்கள்

செய்திப்பிரிவு

டெல்லி மாநகராட்சி கடந்த 2012 மே மாதம் 3 ஆகப் பிரிக்கப்பட்டது. அதன்படி கிழக்கு, தெற்கு, வடக்கு என 3 மாநகராட்சி நிர்வாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 3 மாநகராட்சிகளும் பாஜக வசம் உள்ளன.

டெல்லி மாநகராட்சிகளில் பணி யாற்றும் துப்புரவு தொழிலாளர் களுக்கு சில மாதங்கள் ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை கண்டித்தும் ஊதிய உயர்வு கோரி யும் கடந்த 27-ம் தேதி முதல் துப்புரவு தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இதனால் டெல்லி சாலை, தெருக்களில் குப்பைகூளங்கள் குவிந்து கிடக்கின்றன.

இதைத் தொடர்ந்து டெல்லியை ஆளும் ஆம் ஆத்மிஅமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அந்த கட்சித் தொண்டர்கள் நேற்று சாலை, தெருக்களை சுத்தம் செய்தனர். சபாநாயகர் ராம் நவாஸ் கோயல், ஷாதரா பகுதியில் துப்புரவு பணிகளை மேற்கொண்டார்.

துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கிழக்கு டெல்லி பகுதியி லும் சுற்றுலா துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கராவால்நகர் பகுதியி லும் தூய்மைப் பணியில் ஈடுபட்ட னர். எம்எல்ஏக்கள், கட்சித் தொண்டர் கள் அவரவர் பகுதிகளில் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT