முத்தலாக் தடை சட்டத்தால் முஸ்லிம்களிடையே விவாகரத்து 80% குறைந்துள்ளதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் 7 ஆண்டு ஆட்சியில் நாட்டின் விரைவான முன்னேற்றம் பற்றிய புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பேசியதாவது: முஸ்லிம் பெண்களை அவர்களது கணவர்கள் மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி ஒருதலைப்பட்சமாக விவாகரத்து செய்யும் நடைமுறையை உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி மத்திய அரசு சட்டத்தின் மூலம் தடை செய்தது. முத்தலாக் தடை சட்டம் வருவதற்கு முன் இந்த முறையில் விவாகரத்து செய்யும் சம்பவங்கள் அதிகம் நடந்தன.
எனக்கு தெரிந்த குடும்பத்தில் கூட முத்தலாக் முறையால் நடந்த அராஜகத்தை அறிந்த அனுபவம் எனக்கு உள்ளது. அவர்களுக்கு உதவ முயற்சித்தேன். ஆனால், எந்தப் பலனும் இல்லை. இப்போது அந்த நடைமுறையை மத்திய அரசு தடை செய்துள்ளது. முத்தலாக் தடை சட்டத்தால் முஸ்லிம்களிடையே விவாகரத்து 80% அளவுக்கு குறைந்துவிட்டது. இவ்வாறு ஆரிப் முகமது கான் பேசினார்.