இந்தியா

தமிழகத்தில் இருந்து வருவோருக்கு கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம்: கர்நாடகா அரசு அறிவிப்பு

இரா.வினோத்

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேரளா, மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் அந்த மாநில எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இரு மாநிலங்களை ஒட்டியுள்ள 8 மாவட்டங்களில் இரவு நேர மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும். அந்த சான்றிதழ் 72 மணி நேரத்துக்கு முன்பாக சோதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனை கார், பேருந்து, ரயில், விமானம் மூலம் வரும் அனைவருக்கும் பொருந்தும். கரோனா அறிகுறியுடன் கர்நாடகாவுக்கு வருபவர்கள் 7 முதல் 15 நாட்கள் கட்டாயம் அரசு விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT