இந்தியா

நாடு முழுவதும் 52 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, நாடு முழுவதும் சுமார் 52 கோடி பேருக்கு (51,85,17,148) கரோனா-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 21-ல் இருந்து அனைவருக்கும் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை தொடங்கி உள்ள நிலையில், இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 37 லட்சத்திற்கும் அதிகமான (37,76,765) தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன

18 - 44 வயது பிரிவில் 20,47,733 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 4,05,719 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோஸையும் இன்று பெற்றனர்.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் நிலவரம்:

37 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 18,20,95,467 பேர் முதல் டோஸையும், 1,29,39,239 நபர்கள் இரண்டாம் டோஸையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இது வரை பெற்றுள்ளனர்.

மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை 18-44 வயது பிரிவினருக்கு இது வரை செலுத்தியுள்ளன.

ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், டெல்லி, ஹரியானா, ஜார்கண்ட், கேரளா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் தடுப்பு மருந்தை இது வரை வழங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 10,45,1548 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 8,09,288 நபர்கள் இரண்டாம் டோஸையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்.

புதுச்சேரியில் 2,86,550 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 3533 பேர் இரண்டாம் டோஸையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT