குஜராத் மாநிலம் வதோதரா அருகே குரங்கை விழுங்கிய மலைப்பாம்பு நிலையில் நகர முடியாமல் திணறிய மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர்.
வதோதரா அருகே ஆற்றங்கரையருகே மலைப்பாம்பு ஒன்று சுருண்ட நிலையில் காணப்பட்டது. அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது அந்த மலைப்பாம்பு குரங்கு ஒன்றை அப்படியே விழுங்கியதால் நகர முடியாமல் அங்கேயே அதிகமான மயக்கத்தில் கிடந்துள்ளது தெரிய வந்தது. அந்த மலைப்பாம்பு 11 அடி நீளம் கொண்டதாக இருந்தது.
இதனையடுத்து கூண்டு வைத்து மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது. பாம்பை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
மலைபாம்பின் உடல்நிலை சீரடைந்ததும் அந்த பாம்பு ஜம்புகோட் வனவிலங்கு சரணாலயத்தில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.