இந்தியா

‘‘சிங்கத்தின் கம்பீரமும் தைரியமும்’’ - பிரதமர் மோடி பகிர்ந்த புகைப்படங்கள்

செய்திப்பிரிவு

உலக சிங்க தினமான இன்று வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஆசிய சிங்கத்தின் தாயகமாக இந்தியா இருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். சிங்கங்கள் தொடர்பான பல்வேறு புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

உலக சிங்க தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து தகவலை பகிர்ந்துள்ளார். மேலும் சிங்கங்கள் தொடர்பான பல்வேறு புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

சிங்கம் கம்பீரமாகவும் தைரியமாகவும் இருக்கும். ஆசிய சிங்கத்தின் தாயகமாக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. உலக சிங்க தினமான இன்று, சிங்கங்களைப் பாதுகாப்பதில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில வருடங்களாக இந்தியாவின் சிங்கங்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.

குஜராத் முதல்வராக நான் பணியாற்றியபோது அங்குள்ள கிர் வனப்பகுதியில் சிங்கங்களை பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை பாதுக்காக்கவும் வேலை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

சிங்கங்களின் வாழ்விடங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக உள்ளூர் சமூகத்தின் ஒத்துழைப்புடன் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை கொண்ட பல்வேறு விதமான முயற்சிகள் எடுக்கப்பட்டன. இது அந்த பகுதியில் சுற்றுலாவுக்கும் ஊக்கமாக அமைந்தது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT