தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கு பாகிஸ்தானின் உளவு அமைப் பான ஐஎஸ்ஐ அதிகாரிகள் பயிற்சி அளித்த தகவல் வெளியாகி யுள்ளது.
இதுதொடர்பாக அரசு மூத்த வழக்கறிஞர் உஜ்வல் நிகாம் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீரில், இந்திய ராணுவத் துக்கு எதிராக போராட ஹெட்லி விரும்பியுள்ளார். ஆனால், லஷ்கர் இ தொய்பா தளபதி ஸகியுர் ரஹ்மான் லக்வி அவரைத் தடுத்து, அதைவிட சாகசமான தாக்குதலில் ஈடுபடச் செய்வதாகக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் உளவுத் துறை யான ஐஎஸ்ஐ அதிகாரிகள் மேஜர் இக்பால், மேஜர் அலி ஆகியோர் குறித்து அதிக தகவல்களை ஹெட்லி தெரிவித்துள்ளார்.
மேஜர் இக்பால்தான் ஹெட் லிக்கு பயிற்சி அளித்துள்ளார். இது தவிர மேலும் சில லஷ்கர் இ தொய்பா பயிற்சியாளர்களின் பெயர்களை நீதிமன்றத்தில் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
நாளை(செவ்வாய்க்கிழமை) மேலும் முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டு, கூடுதல் உண்மை களை பெற முயற்சி செய்வோம்.
சில முக்கியமான தகவல்களை அவர் அளித்துள்ளார். ஹபீஸ் சயீதை சந்தித்ததை உறுதி செய்த அவர், புகைப்படத்திலும் அடையாளம் காட்டினார்.
லஷ்கர் இ தொய்பா பயிற்சி முகாமில், ஏகே 47 ரக துப்பாக் கியை இயக்கவும், வெடி குண்டை வெடிக்கச் செய்யவும், வேவு பார்க்கவும் ஹெட்லிக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக சயீதும், லக்வியும் பேசும் தலைமைப் பண்பு பயிற்சியிலும் ஹெட்லி சேர்ந்துள்ளார். பாகிஸ்தானிலுள்ள ஹசன் அப்தல் கேடட் கல்லூரியில் படிப்பை முடித்த ஹெட்லி தனது 17-வது வயதில் அமெரிக்கா சென்று விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ரிஜிஜு கருத்து
உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு இதுதொடர்பாகக் கூறும்போது, “அரசு மற்றும் அரசு சாராதவர்களின் பங்களிப்புக்கு இடையே உள்ள வேறுபாடு ஹெட்லியின் வாக்குமூலம் வெளி யாகும். யாருக்கெல்லாம் தொடர்பு என்பது தெரிந்து விட்டது.
ஹெட்லியின் வாக்குமூலம் தர்க்கரீதியான முடிவுக்கு உதவும். ஹெட்லி தனது பின்னணியை விவரித்திருப்பது நமது புலனாய்வுத் துறையினருக் கும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் களுக்கும் உதவியாக இருக்கும்” என்றார்.