இந்தியா

விவசாயிகளுக்கு அடுத்த தவணை நிதியுதவி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 அளிக்கும் திட்டத்தின் கீழ் அடுத்தத் தவணை நிதியை பிரதமர் மோடி இன்று வழங்கி தொடங்கி வைத்தார்

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.

இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ. 1.38 லட்சம் கோடி நிதி உதவி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை நிதியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி வாயிலாக வழங்கி தொடங்கி வைத்தார்.

இதன்படி 9.75 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,500 கோடி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியில் விவசாய பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சி்ங் தோமர் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்

SCROLL FOR NEXT