இந்தியா

கோழிக்கோடு விமான விபத்தில் பாதித்தோருக்கு முழு இழப்பீடு வழங்கியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

செய்திப்பிரிவு

கேரளாவில் கோழிக்கோட்டில் கடந்த ஆண்டு நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கும், காயமடைந் தவர்களுக்கும் முழு இழப்பீடு வழங்கப்பட்டதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி துபாயில் இருந்து 190 பேருடன் வந்த ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது புயல் மற்றும் கன மழை காரணமாக பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் 19 பயணிகளும் 2 விமான ஓட்டிகளும் உயிரிழந்தனர். மேலும் 165 பயணிகள் மற்றும் 4 விமான பணியாட்கள் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ஏர் இந்தியா திட்டமிட் டது. உடனடி இடைக்கால இழப்பீடாக உயிரிழந்த 12 வயதுக்கு மேலான பயணிகளின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், 12 வயதுக்கு குறைவான பயணிகளின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும் தீவிர காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து இறுதி இழப்பீட்டை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பம் அனைத்து பயணிகளுக்கும் ஏர் இந்தியா வழங்கியது.

விண்ணப்பத்தின் அடிப் படையில் இந்த விபத்தில் பாதிப்புக்குள்ளான பயணிகளை ஏர் இந்தியா நிர்வாகம் நேரடியாக சந்தித்து அவர்களுக்கான இழப்பீட்டை மதிப்பீடு செய்துள்ளது. இந்த நடைமுறைகள் நிறைவடைந்த நிலையில் காயமடைந்த பயணி களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், விமானப் பணியாட்களுக்கும் இறுதி மற்றும் முழு இழப்பீட்டை வழங்கி விட்டோம் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் இழப்பீடு தொடர் பாக உயிரிழந்தவர்கள் குடும்பத் தினரோ, காய மடைந்த பயணிகளோ எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும் ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. -பிடிஐ

SCROLL FOR NEXT