இந்தியா

மிகைப்படுத்தும் ஊடகங்கள்: முதல்வர் அகிலேஷ் தாக்கு

செய்திப்பிரிவு

பதானில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கிவரும் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் நிகழும் சம்பவங்களை மட்டுமே ஊடகங்கள் பெரிதுபடுத்தி வெளியிடுவதாக குறை கூறியுள்ளார் முதல்வர் அகிலேஷ் யாதவ்.

இது தொடர்பாக நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது: பிற மாநிலங்களில் நிகழும் சம்பவங்களை ஊடகங்கள் பெரிதுபடுத்தாமல் தவிர்க்கின்றன. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் நடப்பவற்றை பெரிதுபடுத்துகின்றன.

பலாத்காரம் போன்ற சம்பவங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை இந்த அரசு எடுத்துவருகிறது. பதான் விவகாரத்திலும் கடுமையான நடவடிக்கையை எடுக்கப்பட்டு வருகிறது. சிபிஐ விசாரணை பற்றியும் முடிவு எடுத்துள்ளோம்.

உத்தரப் பிரதேசத்தில் நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் பெரிதுபடுத்தப்படுகின்றன. இவை இந்த மாநிலத்தில் மட்டுமே நடப்பவை அல்ல. பெங்களூரிலும் நடந்துள்ளது. ஆனால், தொலைக்காட்சிகள் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பவில்லை. இதுபோன்ற சம்பவம், மத்தியப் பிரதேசத்திலும் நடக்கிறது.

SCROLL FOR NEXT