கரோனா தடுப்பு மருந்து வழங்கல் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ள நிலையில், இதை மேலும் அதிகரித்து, அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் மக்கள் தடுப்பு மருந்து பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது 48 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை கோடியை கடந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 50,10,09,609 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 49,55,138 ஆக உயர்ந்துள்ளது.
இதனை குறிபிட்டு பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி,
தடுப்பு மருந்து வழங்கல் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ள நிலையில், கோவிட்-19-க்கு எதிரான இந்தியாவின் போருக்கு வலுவான உத்வேகம் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
கோவிட்-19-க்கு எதிரான இந்தியாவின் போருக்கு வலுவான உத்வேகம் கிடைத்துள்ளது. தடுப்பு மருந்து வழங்கல் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ளது.
இதை மேலும் அதிகரித்து, அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் நமது மக்கள் தடுப்பு மருந்து பெறுவதை உறுதி செய்ய நம்பிக்கையுடன் உள்ளோம்.
கோவிட்-19-க்கு எதிரான இந்தியாவின் போருக்கு வலுவான உத்வேகம் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.