இந்தியா

பியூச்சர் குழுமத்தை வாங்க ரிலையன்ஸுக்கு தடை

செய்திப்பிரிவு

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பியூச்சர் குழுமத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கையகப்படுத்தும் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்காவின் சங்கிலித் தொடர் நிறுவனமான அமேசான் தொடர்ந்த வழக்கில் அந்நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் கிடைத்துள்ளது.

சர்வதேச வர்த்தக விதிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கை என சிங்கப்பூரில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் அமேசான் வழக்கு தொடர்ந்தது. அதில் அமேசான் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில், சிங்கப்பூர் தீர்ப்பாய முடிவுசெல்லும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதனால் 340 கோடி டாலர் (ரூ.24,731 கோடி) மதிப்பில் பியூச்சர் குழும சங்கிலித் தொடர் நிறுவனங்களை கையகப்படுத்தும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் உள்ள அவசர வழக்குகளை விசாரிக் கும் தீர்ப்பாயம் பியூச்சர் குழுமத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்தி வைத்தது. இந்த தீர்ப்பு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது.

பியூச்சர் குழுமத்துக்கு 1,700 சங்கிலித் தொடர் விற்பனை யகங்கள் உள்ளன. நிதி நெருக்கடியை எதிர்கொள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்கும் முடிவை கிஷோர் பியானி எடுத்தார். ஆனால், ரிலையன்ஸ் கைப்பற்றினால் ஏகபோக நிலை உருவாகும் என்று அமேசான் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT