கேரள மாநிலத்தவர்கள் கர்நாடகாவுக்குள் நுழைவதை தடுப்பதற்காக எல்லைப் பகுதியில் ஜேசிபி மூலம் குழி தோண்டும் கர்நாடக போலீஸார். 
இந்தியா

கேரள மாநிலத்தவர் நுழைவதை தடுப்பதற்காக எல்லையில் குழி தோண்டிய கர்நாடக போலீஸ்: கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு

இரா.வினோத்

கரோனா பீதியால் கேரள மாநிலத் தவர்கள் நுழைவதைத் தடுக்க கர்நாடக மாநில எல்லையில் போலீ ஸார் குழிகளை தோண்டியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. இதற்கு கேரள முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை பரவாமல் தடுப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று ஆலோசனை நடத்தினார். கரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கூட் டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

கர்நாடகாவில் கரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. அண்டை மாநிலங்களான கேரளா, மகாராஷ் டிராவில் தொற்று அதிகமாக இருப் பதால் அதை ஒட்டியுள்ள மாவட் டங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. எனவே, முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக கர் நாடகா முழுவதும் வெள்ளிக் கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிரா, கேரளா எல்லை யோர மாவட்டங்களில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. பெங்களூரு மாநகரில் வரும் 16-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஆன்மிக நிகழ்வுகள், போராட்டங்கள், பேரணி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் தெரி வித்தார்.

கேரள வாகனங்களுக்கு தடை

இந்நிலையில், காசர்கோடு, தலபாடி, கொடேகர், மரிய ஆஷ்ரம் ஆகிய சோதனைச் சாவடிகளின் வழியாக கேரள மாநிலத்தவர்கள் கர்நாடகாவுக்குள் நுழைவதை தடுப்பதற்காக போலீஸார் பெரிய அளவில் குழிகளை தோண்டியுள் ளனர். தட்ஷிண கன்னடா, சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் சாலையில் நடுவில் மலை அளவுக்கு மண்ணை கொட்டி, கேரள வாகனங்கள் நுழை வதை தடுத்துள்ளனர். கேரள வாக னங்களை திருப்பிவிடும் பணி யிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகாவின் இந்த நடவடிக் கையைக் கண்டித்து காசர்கோட் டில் கேரள இளைஞர் காங்கிரஸார் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

இதுகுறித்து கர்நாடக போலீ ஸார் கூறும்போது, ‘‘தினமும் ஆயி ரக்கணக்கான வாகனங்களில் மக்கள் வருகின்றனர். ஒவ்வொரு வரையும் பரிசோதித்து கர்நாடகா வுக்குள் அனுப்புவது சிரமமாக உள்ளது. குறைந்த எண்ணிக்கை யிலான போலீஸாரை கொண்டு மாநில எல்லையை கண்காணிப்பது இயலாத காரியம். எனவே, மாவட்ட நிர்வாகங்களின் ஒப்புதலுடன் குழிகள் தோண்டப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.

இதற்கு கேரள முதல்வர் பின ராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, ‘‘கர்நாடக அரசு எல்லை யோர சாலைகளில் குழி தோண்டி இருப்பது ஏற்கதக்கதல்ல. கரோனா கட்டுப்பாட்டு விதிமுறை கள் தொடர்பாக மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் களுக்கு எதிராக கர்நாடகா செயல்படுகிறது. எக்காரணம் கொண்டும் மாநிலங்களின் எல்லை களை மூடக்கூடாது என‌மத்திய உள் துறை அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கேரள மாநில காவல்துறை டிஜிபி அனில் காந்த், கர்நாடக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் பேசியுள்ளார். அரசுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கர்நாடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக அரசு உடனடியாக இத்தகைய நடவடிக்கையை நிறுத் திக்கொள்ள வேண்டும். கேரள பயணிகளை கர்நாடக மாநிலத்துக் குள் நுழைய அனுமதிக்க வேண் டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT