பெங்களூருவில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கல்லூரி மாணவி நிர்வாணப் படுத்தி தாக்கப்பட்ட வழக்கில் பாஜக கவுன்சிலர் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ் வழக்கில் அலட்சியம் காட்டிய பெங்களூரு துணை காவல் ஆணையர் உட்பட 6 போலீஸார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் உள்ள சோழதேவனஹள்ளி யில் சூடான் நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் முகமது அஹாத் இஸ்மாயில்(21) ஏற்படுத்திய விபத்தில் சஃபானா தாஜ்(35) உயிரிழந்தார். இதனால் ஆத்திர மடைந்த ஒரு கும்பல் இஸ்மாயிலை தாக்கி, அவரது காரை தீயிட்டு கொளுத்தியது. அப்போது அங்கு வந்த தான்சானியாவைச் சேர்ந்த கல்லூரி மாணவியை அக்கும்பலில் இருந்தவர்கள் கடுமையாக தாக்கினர்.
மேலும், நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். அவருக்கு உதவ முயன்ற ஆப் பிரிக்க இளைஞருக்கும் அடி விழுந்தது. அங்கிருந்த போலீஸார் தடுக்காமல் வேடிக்கை பார்த்த தாகக் கூறப்படுகிறது.
மாணவியின் புகாரை ஹெசர கட்டா போலீஸார் ஏற்க மறுத்தனர். மத்திய வெளியுறவு அமைச்சகம், தான்சானியா தூதரகத்தின் தலை யீடு காரணமாக 3 நாட்களுக்குப் பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மத்திய வெளியுறவுத்துறை, தான்சானியா தூதரகம், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவை இவ்விவகாரம் தொடர் பாக அறிக்கை அளிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில், வழக்கில் தொடர் புடைய பாஜக கவுன்சிலர் பங்காரு கணேஷ் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக ஹெசரகட்டா காவல் நிலைய ஆய்வாளர் பிரவீன் பாபு மற்றும் 4 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே பெங்களூரு மாநகர காவல் துணை ஆணையர் ஏ.என். பைஸ் நேற்று இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.