இந்தியா

முன்தேதியிட்டு வரி விதிக்கும் சட்டத்தை நீக்க மசோதா: கெய்ர்ன் எனர்ஜி, வோடபோன் நிறுவனங்கள் பயனடையும்

செய்திப்பிரிவு

சர்ச்சைக்குரிய முன்தேதியிட்டு வரி விதிக்கும் முறையை நீக்க வகை செய்யும் புதிய மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனால் கெய்ர்ன் எனர்ஜி, வோடபோன் நிறுவனங்கள் பயனடையும்

முன்தேதியிட்டு வரி விதிக்கும் சட்டம் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது (2012) கொண்டுவரப்பட்டது. இது மூலதன ஆதாயம் திரட்டிய நிறுவனங்கள் மீது முன்தேதியிட்டு வரி வசூலிக்க வழிவகைசெய்தது. இதனால் கெய்ர்ன் எனர்ஜி மற்றும் வோடபோன்குழும நிறுவனங்களுக்கு முன் தேதியிட்டு வரி விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து இந்நிறுவனங்கள் சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்து வெற்றி கண்டன.

இந்நிலையில், வரி விதிப்பு (சட்டம்) மசோதா 2021-ஐ மத்திய அரசு மக்களவையில் நேற்று தாக்கல் செய்தது. இது வருமான வரிச் சட்டம் 1961-ல்திருத்தம் மேற்கொள்ளவும், எதிர்காலத்தில் முன்தேதியிட்டு வரிவசூல் செய்வதைத் தடுக்கவும் வகை செய்யும்.

இதன்படி 2012-ம் ஆண்டு மேமாதத்துக்கு முன்பு மறைமுகமாக பரிவர்த்தனை செய்யப்பட்ட இந்திய சொத்துகள் மீது விதிக்கப்பட்ட வரி, சில நிபந்தனைகளின் அடிப்படையில் விலக்கிக் கொள்ளப்படும். இதன் மூலம் கெய்ர்ன், வோடபோன் நிறுவனங்கள் பயனடையும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT