ரயில்வே பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. அனைத்து முன்பதிவு பெட்டிகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் துணை இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் களுக்கான பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், நடுப் பகுதியில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும். 24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாளும் செயல்படும் ஹெல்ப் லைன்கள் பிரத்யேகமாக மகளிருக்காக அமைக்கப்படும்.
குழந்தைகளுடன் செல்லும் பெண்களுக்காக, உணவுப் பட்டிய லில் சிறார்களுக்கு தனி உணவுப் பட்டியலும், குழந்தைகளுக்கு உணவு, சூடான பால் ஆகியவை ரயில் நிலையங்களில் அறிமுகம் செய்யப்படும். இளம் தாய்மார்கள், குழந்தைகளுக்கு டயாபர்களை எளிதில் மாற்றுவதற்கு தனி இடம் ஒதுக்கப்படும்.
தானியங்கி கதவு போன்ற புதிய வசதிகள் பெண்களுக்கு உதவியாக இருக்கும். கிளீன் மை கோச் சேவையின் கீழ் எஸ்எம்எஸ் மூலம், ரயில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய கோரிக்கை வைக்க முடியும். இதுவும் பெண்களால் வரவேற்கப்படும் திட்டமாக இருக்கும்.