இந்தியா

பதான்கோட் தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாத தலைவர் மசூத் அசாருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை: பாகிஸ்தான் விசாரணை குழு கைவிரிப்பு

ஏஎன்ஐ

பதான்கோட் தாக்குதல் சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத தலைவர் மூளையாக செயல்பட்டார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என பாகிஸ்தான் கைவிரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் டில் உள்ள விமானப்படை தளத் துக்குள் கடந்த ஜனவரி, 2-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆறு பேர் ஊடுருவினர். தொடர்ந்து 3 நாட் கள் நீடித்த இந்த தாக்குதல் சம்பவத் தின் இறுதியில், தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். அதே சமயம் ராணுவத் தரப்பில் 7 பேர் பலியானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ் தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீிவிரவாத தலைவர் மவுலானா மசூத் அசார் தான் மூளையாக இருந்து செயல் பட்டார் என்பதற்கான ஆதாரங்களை இந்தியா வழங்கியது.

இதையடுத்து தீவிரவாதிகளை பிடிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமைத்திருந்தார். இக்குழு இந்தியா அளித்த ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில் பதான்கோட் தாக்குதலுக்கு மசூத் அசார் தான் மூளையாக செயல்பட்டார் என்பதற் கான உறுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை என விசாரணை குழுவினர், இந்தியாவிடம் தெரிவித்திருப்பதாக பாகிஸ்தானில் இருந்து வெளி யாகும் நாளிதழில் செய்திகள் வெளி யாகியுள்ளன. பதான்கோட் தாக்கு தல் சம்பவம் தொடர்பாக பாகிஸ் தான் உண்மையாக விசாரணை நடத்தியதா? என்ற சந்தேகம் எழுந் திருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT