இந்தியா

பெகாசஸ் மென்பொருள் விவகாரத்தில் எஸ்ஐடி விசாரணை தேவை: உச்ச நீதிமன்றத்தில் எடிட்டர்ஸ் கில்டு மனு

செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளிட்டோரின் செல்போன்கள், பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்திய செய்தி நிறுவன ஆசிரியர்கள் கூட்டமைப்பு (எடிட்டர்ஸ் கில்டு) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனுவில்,"தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்படும் உளவுமென்பொருளை, பத்திரிகையாளர்களுக்கு எதிராக பயன்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.

பத்திரிகை சுதந்திரம் என்பதுஅரசின் தலையீடு இல்லாதது. உண்மையை வெளிக் கொண்டுவரும் விதமான புலனாய்வு மிகவும் ரகசியமானது. இதற்கானபேட்டிகள், தரவுகள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட வேண்டியவை. இதன்மூலம் தான் அதிகார துஷ்பிரயோகம், ஊழல், அரசுகளின் செயல்படாதன்மை போன்றவற்றை வெளிக்கொண்டுவர முடியும். பெகாசஸ்ஒட்டு கேட்பு விவகாரம் இவை அனைத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது. எனவே இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.- பிடிஐ

SCROLL FOR NEXT